நாளை டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து வகை மதுபானக் கூடங்களும் விடுமுறை
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படவுள்ளது.

டாஸ்மாக் கடைகளுக்கு தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் நாட்களிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் திருவள்ளுவர் தினம் - ஜனவரி 15, குடியரசு தினம் - ஜனவரி 26, வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மகாவீர் ஜெயந்தி, மே தினம் - மே 1, சுதந்திர தினம் - ஆகஸ்ட் 15, நபிகள் நாயகம் பிறந்த நாள் (மிலாது நபி), காந்தி ஜெயந்தி - அக்டோபர் 2, ஆகிய தினங்களில் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம்.
அந்தவகையில், நாளை திருவள்ளுவர் தினம் அரசு டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து வகை மதுபானக் கூடங்களும் விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


