டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானத்தை அறிமுகப்படுத்த டாஸ்மாக் திட்டம்

 
tasmac

டாஸ்மாக் மதுபான கடைகளில் கண்ணாடி பாட்டில்களுக்கு பதிலாக டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானத்தை அறிமுகப்படுத்த தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் மதுபான கடைகள், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் டாஸ்மாக் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களில் மதுபானம் விற்பனை செய்யப்படு வருகிறது. இதனால் கடைகளுக்கு விநியோகிக்கும் போது அவ்வபோது பாட்டில்கள் சேதம் அடைந்து மதுமானங்கள் வீணாவதால் அரசுக்கு இழப்பீடு ஏற்படுகிறது. இந்த நிலையில், டாஸ்மாக் மதுபான கடைகளில் கண்ணாடி பாட்டில்களுக்கு பதிலாக டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானத்தை அறிமுகப்படுத்த தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானத்தை விற்பனை செய்வது தொடர்பாக சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. கண்ணாடி பாட்டில்களை விட டெட்ரா பாக்கெட்டுகள் செலவு குறைவு என்பதாலும், கலப்படம் செய்ய முடியாது என்பதாலும் அவற்றை அறிமுகப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள்ளது.