டாஸ்மாக் விற்பனை: அமைச்சர் முத்துசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்

 
tasmac

தமிழ்நாட்டில் 500 மதுபானக்கடைகள் மூடப்பட்ட நிலையில், மதுபான விற்பனை குறைந்திருப்பதை அடுத்து அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது.

Tasmac

சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின் போது 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு கடந்த 22ஆம் தேதி முதல் 500 கடைகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் தினசரி விற்பனை 25 சதவீதம் வரை குறைந்துள்ளது

tasmac

இந்நிலையில்  அமைச்சர் முத்துசாமி தலைமையில் டாஸ்மாக் விற்பனை குறித்து இன்று ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. அதிக விலைக்கு மது விற்பதை தடுப்பது, பிரச்சினைக்குரிய கடைகளை மூடுவது ,சிசிடிவிகள் பொருத்துவது ,கணினி வழி ரசீது, கட்டுப்பாட்டு அறை அமைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. அத்துடன் தமிழ்நாட்டில் 500 மதுபான கடைகள் மூடப்பட்ட நிலையில் மதுபான விற்பனை குறைந்திருப்பதையடுத்து தமிழ்நாடு அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது.  அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் உள்துறை முதன்மைச் செயலாளர், மதுவிலக்கு ஆயத்  தீர்வைத் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.