டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரனுக்கு இங்கிலாந்தின் உயரிய ‘நைட்ஹுட்’ பட்டம்..!

இங்கிலாந்து மற்றும் இந்திய வர்த்தக உறவு மேம்பட அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காகவும் சேவைகளுக்காக டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரனுக்கு, மிகச் சிறந்த பிரிட்டிஷ் பேரரசின் ஆணை என்ற ‘நைட்ஹுட்’ விருது வழங்கப்படுவதாக பிரிட்டிஷ் அரசு தெரிவித்துள்ளது.
“இந்த மதிப்புமிக்க அங்கீகாரத்தை எனக்கு அளித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதற்காக மன்னர் சார்லஸ் III-க்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தொழில்நுட்பம், நுகர்வோர், விருந்தோம்பல், எஃகு, ரசாயனங்கள் போன்ற துறைகளில் இங்கிலாந்துடன் வலுவான உறவைப் பேணுவதில் டாடா குழுமம் மிகவும் பெருமைப்படுகிறது என்பதை இத்தருணத்தில் நான் தெரிவிக்க விரும்புகிறேன்,” என்று இந்த கௌரவத்தைப் பற்றி திரு சந்திரசேகரன் கூறினார்.
மேலும், டாடா குழுமத்தின் சார்பாக, குழுமத்திற்கு அளித்த ஆதரவிற்கு பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என டாடா குழுமத் தலைவர் தெரிவித்தார்.