நிலத்தடி நீருக்கு வரி?- மத்திய அரசு மறுப்பு

 
sச் sச்

விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பு என்ற தகவலில் உண்மை இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்திய அரசின் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் எச்.எம். பாட்டீல்,  நிலத்தடி நீர் பயன்படுத்தும் உழவர்கள் மீது நீர்ப்பயன்பாட்டு வரி விதிக்கப்படும் என அறிவித்திருந்தார். ஏற்கனவே அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் உரிய நேரத்தில் கிடைக்கப்பெறாத நிலையில், மாநிலத்தின் பெரும்பங்கு வேளாண்மைக்கு முதன்மை நீராக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கும் வரி விதிக்கும் மத்திய நீர்வளத்துறையின் முடிவு தமிழக விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிகள் பல இடங்களில் போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும் இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பு என்ற தகவலில் உண்மை இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. விவசாயிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக தவறான தகவலை வெளியிட வேண்டாம், நீர் மேலாண்மை மாநில அரசின் கீழ்தான் வரும் என்பதால் கட்டணம் வசூல் என்பது அவர்களது முடிவு, நீர் மேலாண்மையை மேம்படுத்தும் நோக்கத்திலேயே நீர் மேலாண்மை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.