குடிநீர் கட்டணங்களை தாமதமாக செலுத்தும் நுகர்வோர்களுக்கு மேல் வரி குறைப்பு

 
chennai water

வரும் ஜூலை 1 முதல் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை தாமதமாக செலுத்தும் நுகர்வோர்களுக்கு மேல் வரி மாதத்திற்கு 1.25% இருந்து 1% ஆக குறைக்கப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

chennai water

இதுக்குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "01.07.2023 முதல் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர், கழிவு நீரகற்று வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை காலதாமதமாக செலுத்தும் நுகர்வோர்க்கு மேல் வரி (Surcharge) மாதத்துக்கு 1.25 என்ற சவீதத்தில் இருந்து 1 சதவீதமாக குறைக்கப்படும்.

metro water

தற்போது, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை காலதாமதமாக செலுத்தும் நுகர்வோர்களுக்கு மாதத்துக்கு 1.25% என்ற விகிதத்தில் மேல் வரி (Surcharge) வசூலிக்கப்ட்டு வருகிறது.

இந்நிலையில் நுகர்வோர்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது வசூலிக்கப்பட்டு வரும் மேல் வரி 1.25% இருந்து 1.7.2023 முதல் 1% குறைத்திட சென்னை குடிநீர் வாரியம் தீர்மானித்துள்ளது. எனவே சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் (மண்டலம் 1 முதல் 15 வரை) உள்ள நுகர்வோர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக் கெடுவுக்குள் குடிநீர் / கழிவு நீரகற்று வரி மற்றும் கட்டணங்கனை செலுத்தி மேல் வரியினை தவிர்த்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளது.