நடப்பு நிதியாண்டில் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய TCS திட்டம்..!!
12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் அறிவித்துள்ளது.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருவதும் டிசிஎஸ் எனப்படும் டாடா கன்சல்டன்சி நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் 6,13,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் டாடா கன்சல்டன்சி நிறுவனம் தனது ஊழியர்களின் 2 % பேரை பணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி 2% ஊழியர்களான 12,000 பேர் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏஐ தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதால் நிறுவனத்தின் செயல்பாடுகள் மாறி உள்ளதாக விளக்கமளித்துள்ள டிசிஎஸ் தலைமை செயல் அதிகாரி க்ரித்திவாசன், ஏஐ தொழில்நுட்பத்துக்கு ஏற்ற திறன் ஊழியருக்கு உள்ளதா என மதிப்பீடு செய்து பயிற்சி வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் எந்த துறைக்கும் பொருத்தமில்லாத 2% ஊழியர்களை பணியில் இருந்து நீக்கும் கடினமான முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


