சென்னையில் டீ, காபி விலை உயர்வு.. நாளை முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு..

 
டீ பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. சென்னையில் டீ விலை ரூ.15 ஆக அதிகரிப்பு.. டீ பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. சென்னையில் டீ விலை ரூ.15 ஆக அதிகரிப்பு..


சென்னையில் நாளை டி மற்றும் காபி விலை உயர்த்தபடுவதாக டீ கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.  

காய்கறிகள், பால், மளிகை பொருட்கள், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் முதல் தங்கம் , வெள்ளி  என  அத்தியாவசிய பொருட்கள் தொடங்கி ஆடம்பர பொருட்கள் வரை விலைவாசி உயர்வு மக்களை  கலக்கமடையச் செய்து வருகிறது.  இதன் ஒரு பகுதியாக டீ, காபி விலையும் தற்போது உயர்த்தப்படுவதாக டீ கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

டீ பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. சென்னையில் டீ விலை ரூ.15 ஆக அதிகரிப்பு..

அதாவது பால் விலை, டீதூள் மற்றும் காபி தூள் விலை உயர்வு, போக்குவரத்து செலவு அதிகரிப்பால் வேறு வழியில்லாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  அதன்படி ஒரு கிளாஸ் டீ ரூ.12 லிருந்து ரூ.15 ஆகவும்,  காபி ரூ.15 ல் இருந்து ரூ.20ஆகவும் உயர்த்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  அத்துடன் சென்னையில் இந்த டீ, காபி விலை உயர்வு அமலுக்கு வருவதாகவும், இந்த புதிய விலைப்பட்டியல் டீ கடைகளில்  வெளியிடப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு டீ, காபி விலை உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.