ஆசிரியராக ரெடியா பட்டதாரிகளே... நாள் குறித்த டிஆர்பி - இதுதான் தேர்வு தேதியாம்?

 
டிஆர்பி

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வருடங்களாகவே கொரோனா பரவி வருகிறது. இதன் காரணமாக ஆரம்பத்தில் முழு ஊரடங்கு போடப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. அரசு பணியிடங்களுக்கான டிஆர்பி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இது ஓய்ந்த பின்னர் மீண்டும் தேர்வுகளை நடத்த தேர்வு வாரியம் திட்டமிட்டிருந்தது. ஆனால் டெல்டா உருவில் இரண்டாம் அலை மூலம் கொரோனா தாக்கியது. மறுபடியும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இப்படியான நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் அரங்கேறி வந்தன.

ஆசிரியர் தகுதி தேர்வு: மகிழ்ச்சி அளிக்கும் அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு!  | nakkheeran

இதற்கு மேலும் முடியாது என நினைத்த தமிழ்நாடு அரசு விரைவில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுள்ளது. அந்த வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 2ஆம் வாரத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசு கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் 9,494 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஆர்பி வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் 1% தேர்வர்களே தேர்ச்சி! என்ன காரணம்?- Dinamani

இரண்டாம் நிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு ஜூன் இரண்டாவது வாரத்திலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரத்திலும், அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு டிசம்பர் இரண்டாம் வாரத்திலும் நடைபெறும் என டிஆர்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முழு விவரங்களுக்கு http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தை பார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.