நெல்லையில் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும்!!

 
teachers

நெல்லையில் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை  உத்தரவிட்டுள்ளது. 

நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளம் காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நெல்லை சந்திப்பு பேருந்து நிலையப் பகுதி, சிந்துபூந்துறை, மீனாட்சிபுரம், சிஎன் கிராமம், கைலாசபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்த நிலையில் பெரும்பாலனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இந்த சூழலில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஜன.2ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.  நெல்லையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாலும், ஒரு சில இடங்களில் வெள்ள நீர் வடியாததாலும் இவ்வாறு  முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இன்று 8ஆம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கபட்ட நிலையில், முதன்மை கல்வி அலுவலர் ஜன.2 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

rain

இந்நிலையில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இன்று ஆய்வு நடைபெறவுள்ளதால், ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் பணிக்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

rain school leave

பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பள்ளிகளில் இன்று ஆய்வு செய்யவுள்ளதாகவும், இதனால், தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயமாக பள்ளிக்கு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.