கண்ணீர் சிந்திய சசிகலா - துடைத்துவிட்ட உறவுகள்

 
s

சென்னை தி. நகர் இல்லத்தில் தங்கியிருந்த சசிகலா கடந்த 26ஆம் தேதியன்று தஞ்சாவூர் இல்லத்திற்கு சென்றார்.   இருபத்தி ஏழாம் தேதி தினகரன் மகள் வரவேற்பில் கலந்து கொண்டார்.   பின்னர் இருபத்தி ஒன்பதாம் தேதி கமுதி பசும்பொன் சென்று தேவர் சமாதியில் மரியாதை செலுத்தினார்.   மீண்டும் தஞ்சாவூர் இல்லத்திற்கு திரும்பியவர் நவம்பர் 1, 2 தேதிகளில் தஞ்சாவூரில்  ஆதரவாளர்களின் இல்லங்களுக்கு சென்று வந்தார். 

 இந்த தஞ்சாவூர் இல்லம் சசிகலாவுக்காக அவரது கணவர் நடராஜன் ஆசை ஆசையாக கட்டிய வீடு என்று சொல்கிறார்கள்.   இப்படி தன் மனைவிக்காக பார்த்துப் பார்த்துக் கட்டிய பிரம்மாண்ட வீட்டில் ஒரு நாள் கூட சசிகலா வசித்தது கிடையாதாம்.   அவர் ஜெயலலிதாவுடன் போயஸ்கார்டனில் இருந்து விட்டதால் இந்த வீட்டிற்கு ஒரு நாள் கூட வரவில்லையாம்.

ss

 மனைவிக்காக ஆசையாக கட்டிவைத்த  வீட்டில் ஒரு நாள் கூட வந்து தங்கவில்லையே என்று தன் உறவினர்களிடமும் ஆதரவாளர்களிடமும்   வருத்தத்துடன் புலம்பியிருக்கிறார் நடராஜன் என்கிறார்கள்.   அவரின் மறைவுக்குப் பின்னர் தான் 10 நாட்கள் அங்கேயே தங்கி இருக்கிறார் சசிகலா.   தற்போது அந்த வீட்டில் அவர்கள் இருப்பதோடு அல்லாமல் அவரின் உறவினர்களுடன் தீபாவளி கொண்டாடியதை நினைத்து உறவினர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.  30 ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சாவூரில் சசிகலா உறவினர்களுடன் தங்கியிருந்து   தீபாவளி கொண்டாடியது சசிகலாவின் உறவினர்கள் அதிக மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

 சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனம் மறைந்ததை அடுத்து அவருக்கு தீபாவளி படையல் போடப்பட்டிருக்கின்றது.  அதில் கலந்து கொண்ட சசிகலா அண்ணன் மகன் மகாதேவன் வீட்டிற்கும் சென்று இருக்கிறார்.    மகாதேவன் மறைந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன.   இன்னமும் அவன் நினைவாகவே இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார் சசிகலா.

 மகாதேவனை நினைத்து பேசியபோது சசிகலாவின் கண்கள் கண்ணீர் வடிக்க,   உடனே மகாதேவனின் மூத்த மகள் டாக்டர் கீர்த்தனா சசிகலாவின் கண்களை துடைத்து விட்டிருக்கிறார்.   அப்பா இல்லாத குறையை போக்கிவிட்டீர்கள் என்று சொல்லிவிட்டு கீர்த்தனா அழுதிருக்கிறார்.  எதுவேண்டுமானாலும் என்கிட்ட கேளுங்க.  உங்களுக்கு நான் இருக்கிறேன் என்று ஆறுதல் சொல்லி இருக்கிறார் சசிகலா.

தஞ்சாவூரில் தங்கியிக்கும் சசிகலா  ஏழாம் தேதி சென்னை புறப்படுகிறார் என்பதால்,  தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள அவரது ஆதரவாளர்களும் தஞ்சை இல்லத்திற்கு சென்று  அவரை சந்தித்து செல்கின்றனர்.