வேலை கிடைக்காத விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

 
suicide suicide

நாகர்கோவில் அருகே வேலை கிடைக்காத  விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

suicide

நாகர்கோவில் பள்ளவிளை கங்காநகர் முதல் தெருவை சேர்ந்தவர் மிக்கேல். இவரது 2 வது மகள் விவினா பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துள்ளார்.பல இடங்களில் வேலைக்காகவும் முயற்சித்து வந்துள்ளார். வேலை எதுவும் கிடைக்காமல் இருந்து வந்த விவினா பகுதி நேரமாக நாகர்கோவிலில் உள்ள பெண்கள் அழகு நிலையம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் விவினா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார் . இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள லிவினா ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து லிவினாவின்  உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.


இதுகுறித்து லிவினாவின் தாயார் சோபா  ஆசாரிபள்ளம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் சரிவர வேலை கிடைக்காத விரக்தியில் இருந்து வந்த லிவினா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையே  லிவினாவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.மேலும் வேறு ஏதாவது கடிதம் எழுதி வைத்தாரா எனவும் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. இதனிடையே  லிவினாவின் செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இளம்பெண் லிவினா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரையும் உறவினர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.