தேஜஸ் போர் விமானம் வெடித்துச் சிதறி விபத்து - விமானி உயிரிழப்பு..!
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான கண்காட்சி கடந்த 17-ம் தேதி தொடங்கியது. விமான கண்காட்சியின் கடைசி நாளான நேற்று (நவ.21) இந்திய விமானப் படையின் தேஜாஸ் விமானத்தின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியைக் காண ஏராளமானோர் கூடி இருந்தனர்.
இந்நிலையில், தேஜாஸ் விமானம் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மைதானத்தில் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 2.15 மணி அளவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. துபாயில் நிகழ்ந்த தேஜஸ் போர் விமான விபத்தில் உயிரிழந்தவர் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த விமானப்படை விங் கமாண்டர் நம்னாஷ் சியால் என தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழப்புக்கு இந்திய விமானப் படை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்த விமானியின் குடும்பத்தினருடன் இந்திய விமானப் படை உறுதியாக நிற்கிறது. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப் படையின் தேஜாஸ் லகு ரக போர் விமானம் முதன்முறையாக கடந்த ஆண்டு மார்ச் 12-ம் தேதி ஜெய்சல்மாரில் நடைபெற்ற ஒரு பயிற்சிப் பயணத்தின்போது விபத்துக்குள்ளானது. இந்நிலையில், தற்போது துபாயில் விபத்துக்குள்ளாகி உள்ளது.
BREAKING 🚨: Indian HAL Tejas Aircraft crashed during the final day flight display at @DubaiAirshow Site. No pilot ejection seen in the video.#AVgeeks #DubaiAirshow2025 pic.twitter.com/PEiJ96zC68
— Aviation Geeks (@aviationgeeks1) November 21, 2025


