"அதுவரை கோயில் நகைகளை உருக்க கூடாது" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!

 
கோயில் நகைகள்

தமிழ்நாட்டு கோயில்களிலுள்ள நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்ய இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இத்திட்டத்தை ரத்து செய்யக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வத்தாமன் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "இந்து சமய அறநிலைய சட்டத்தில் கோயிலுக்குச் சொந்தமான நகைகளை உருக்க எந்த அனுமதியும் வழங்கவில்லை. அறநிலையத் துறை, கோவில் நிர்வாகத்தில் மட்டும் தலையிட முடியும்.

கோயில் நகைகள் மூலம் வருவாய் ஈட்ட தமிழக அரசு முடிவு': சாதக, பாதகங்கள்  என்னென்ன?| Government of Tamil Nadu decides to earn revenue through temple  jewellery

தவிர மத வழிபாட்டு விவகாரங்களில்  தலையிட முடியாது. வருவாய் ஈட்டுவதற்காக நகைகளை உருக்கி டெபாசிட் செய்வதற்கு பதில், ஆக்கிரமிப்பில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் கோவில் நிலங்களை மீட்டு வருவாய் ஈட்டலாம். கோயில் நகைகள் தொடர்பாக முறையாக எந்த பதிவேடுகளும் பராமரிக்கப்படாத நிலையில், நகைகளை உருக்கி வங்கிகளில் டெபாசிட் செய்வது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நகைகளை உருக்க அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதால் நகைகளை உருக்குவது தொடர்பான சுற்றறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

சேகர்பாபு: அதிரடி அரசியலுக்குச் சொந்தக்காரர்; அறநிலையத்துறை அமைச்சர்!-துறை  ஒதுக்கப்பட்டதன் பின்னணி! Political Journey of Minister P.K.Sekarbabu.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இது பழைய நடைமுறை தான் எனவும், 1977ஆம் ஆண்டிலிருந்து கோயில் நகைகளை உருக்கும் நடைமுறை நடைபெற்று வருவதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதனை நிர்வகிக்கவும் கோயில் நகைகளைக் கணக்கெடுக்கவும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதால் தவறு நடக்காது எனவும் வாதிடப்பட்டது. இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம் அறங்காவலர்களை நியமிக்கும் வரை கோயில் நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்றது. இருப்பினும் காணிக்கை நகைகளைக் கணக்கெடுப்பதில் தவறில்லை என்றும் கூறியுள்ளது.