சிங்கப்பெருமாள் கோவில்- பூஞ்சேரி வரை 6 வழிச்சாலை அமைக்க டெண்டர்
சிங்கப்பெருமாள் கோவில் முதல் பூஞ்சேரி வரை ஆறு வழிச்சாலை அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வடக்கு மற்றும் தென் மாவட்டங்களிலிருந்து எண்ணூர் காமராஜர் துறைமுகம் செல்லும் கனரக வாகன போக்குவரத்தால் நெருக்கடி ஏற்படுகிறது. இதனை குறைப்பதற்கு, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்து எண்ணூர் காமராஜர் துறைமுகம் நோக்கி செல்லும் கனரக வாகனங்கள், தெற்குப் பகுதிகள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்கள் எண்ணூர் மற்றும் காட்டுப் பள்ளி துறைமுகங்களுக்கு எளிதாக சென்றடையவும், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் வணிக மற்றும் தொழில் வளங்களை அதிகரிக்கவும் சென்னை எல்லை சாலை அமைக்க தமிழக அரசால் திட்டமிட்டப்பட்டது.
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில், எண்ணூர் காமராஜர் துறைமுகத்திலிருந்து மாமல்லபுரம் வரை 132.87 கி.மீ. நீளத்திற்கு பல்வேறு கட்டமாக இந்தச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி இந்த சாலையின் இறுதி கட்டமான சிங்கப்பெருமாள் கோவில் முதல் பூஞ்சேரி வரை ஆறு வழிச்சாலை அமைச்சர் தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலை துறை டெண்டர் கோரி உள்ளது. 28 கிலோமீட்டர் நீளத்திற்கு 2700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த சாலை அமைக்கப்பட உள்ளது.


