சென்னையில் பதற்றம் : பிரபல ரவுடி சுட்டுப்பிடிப்பு..!!

 
Q Q
சென்னையை சேர்ந்தவர் ரவுடி சத்யா. இவர் நேற்று முன் தினம் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த கொலையில் விக்கி என்ற ரவுடிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. முன் விரோதம் காரணமாக சத்யாவை விக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து திருவொற்றியூர் பகுதியில் ரவுடி விக்கி பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் நேற்று இரவு போலீசார் அங்கு சென்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த ரவுடி விக்கி போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோட முயன்றார். இதில் சப் இன்ஸ்பெக்டருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து தற்காப்பிற்காக ரவுடி விக்கியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டரும், ரவுடியும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.