செங்கம் அருகே அரசுப் பேருந்தும், காரும் மோதி பயங்கர விபத்து- 7 பேர் பலி

 
விபத்து

செங்கம் அருகே நேற்று இரவு நடைபெற்ற சாலை விபத்தில் இறந்தவர்கள் 7 பேரில், 6 பேர் ஓசூர் அருகே ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்த வட மாநில தொழிலாளர்கள் என்பது தெரியவந்துள்ளது.

Image

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கார் அரசு பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் 7 பேரில் ஊத்தங்கரை மாரப்பட்டி பகுதியை சேர்ந்த காமராஜ் (29) உயிரிழந்த தகவலை கேட்ட காமராஜர் அண்ணன் கிருஷ்ணன் மனைவி செல்வி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.  இந்நிலையில் இறந்தவர்கள் ஓசூர் அடுத்த அக்கொண்டப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய வடமாநில தொழிலாளர்கள் 11 பேரில் டாட்டா சுமோவில் பயணம் செய்த 6 பேர் பலி, ஒருவர் கெலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. ஆக மொத்தம் 7 பேர் பலியாகி உள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Image

ஓசூர் அருகே அக்கொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தங்க உடையார் இவர் அப்பகுதியில் பான்டெக்ஸ் என்ற பெயரில் அட்டைப்பெட்டிக்கு ஒட்டப்படும் பேஸ்ட் உற்பத்தி செய்து வருகிறார். கடந்த 20 நாட்களுக்கு முன் இந்த கம்பெனியை தொடங்கியுள்ளார் அதில் சுமார் 15 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஆயுத பூஜையை முடித்துவிட்டு நிறுவனத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் 11 பேர் டாட்டா சுமோ வாகனத்தில் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றுள்ளனர் பின்னர் வீடு திரும்பி கொண்டிருந்த போது எதிர்பாரதவிதமாக அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இறந்தவர்கள் 6 பேர் ஒரே நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் என தெரிய வந்துள்ளது இறந்தவர்கள், விமல், நாரண செட்டி, குஞ்சை, நிக்கு லெஷ், துலுகாக்கா ஐந்து பேர் வட மாநில தொழிலாளர்கள், டிரைவர் காமராஜ் ஊத்தங்கரையை சேர்ந்தவர் மற்றொரு டிரைவர் கெலமங்கலம் பகுதியை சேர்ந்த புனித் என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் கம்பனியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.