அடுத்த வினாடிகளில் பயங்கர சத்தம் - ராணுவ ஹெலிகாப்டரின் கடைசி நிமிடங்கள் - வைரலாகும் வீடியோ

 
mi17

விபத்துக்கு உள்ளாவதற்கு முன்பாக எம்.ஐ.17 ராணுவ ஹெலிகாப்டரின் கடைசி நிமிடங்கள் குறித்த காட்சிகள் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மேக மூட்டத்திற்குள்  நுழைந்த அடுத்த சில நிமிடங்களில் பயங்கர சத்தம் கேட்கிறது.

 நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உட்பட 14 பேர் அந்த ஹெலிகாப்டரில் சென்று இருக்கிறார்கள்.    கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் வெலிங்கடனில்  இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குன்னூர் காட்டேரிப்  பகுதியில் பறந்த போது திடீர் என்று கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது .  இந்த கோர விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.

mi17 heli

நாட்டையே உலுக்கி எடுத்திருக்கும் இந்த ஹெலிகாப்டரில் விபத்து குறித்த காரணம் முழுமையாக தெரியாமல் இருக்கும் நிலையில்,  குன்னூரு காட்டேரி பூங்கா அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த கேரளத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

 அவர்கள் எடுத்த வீடியோவில் ,  அந்த ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து சென்று மேக மூட்டத்தில் மறைகிறது.  அடுத்த வினாடிகளில் பயங்கர சத்தம் கேட்கிறது. ஆனாலும் வீடியோவில் காணப்படும் ஹெலிகாப்டர் குறித்து விமானப் படையோ,  ராணுவமோ இதுவரைக்கும் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியிடவில்லை.