மதுரையில் பயங்கரம்.. அ.தி.மு.க பிரமுகர் தலை துண்டித்து கொலை..!

 
1 1

மதுரை திருப்பரங்குன்றம் அருகே அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் தலை துண்டித்துக் கொடூர கொலை.

மதுரை சாமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சக்தி. இவரது மகன் செந்தில்குமார் (வயது 36). அ.தி.மு.க. பிரமுகரான இவருக்கு திருமணமாகி காவியா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி அருகே டீக்கடை நடத்தி வருகிறார். தினமும் அதிகாலையில் இவரே கடை திறப்பது வழக்கம்.

அதன்படி செந்தில்குமார் இன்று காலை கடையை திறக்க சென்றார். அப்போது அங்கு வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செந்தில்குமாரை சரமாரியாக வெட்டினர். இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். 

இந்த கொலை குறித்து தகவலறிந்த சிலைமான் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.முன் விரோதத்தில் போதை கும்பல் செந்தில்குமாரை கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்ப டுத்தி உள்ளனர்.