கிருஷ்ணகிரி அருகே பயங்கரம்..! வீட்டில் தனியாக இருந்த தாய்,மகள் கழுத்தை அறுத்து கொலை..!
கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் சுரேஷ் (55). கட்டிட தொழிலாளியான இவர் கடந்த 2018ம் ஆண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இவரது மனைவி எல்லம்மாள் (50). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.
இவர்களின் மகன் பெரியசாமி (15). இவர் ஜாகீர் நாட்ராம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது மகள்கள் இரட்டையர்கள் சுசிதா (13), சுசிகா. . இவர்களில் சுசிகா ஏற்கனவே விபத்தில் இறந்து விட்டார். சுசிதா ஜாகீர் நாட்ராம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் இன்று மதியம் சுசிதா காலாண்டு தேர்வு முடிந்து வீட்டிற்கு வந்தார். பெரியசாமிக்கு பள்ளி மதியமும் இருந்தது. இன்று மாலை எல்லம்மாளின் தம்பியின் மனைவி சரோஜா, எல்லம்மாளின் வீட்டிற்கு சென்றார். அங்கு வீட்டு கதவு திறந்த நிலையில் இருந்தது. இதையடுத்து சரோஜா உள்ளே சென்று பார்த்த போது உள்ளே ஷோபாவில் எல்லம்மாள் வெட்டி படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.
இதேபோல், தரையில் சிறுமி சுசிதாவும் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக காணப்பட்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சரோஜா கூச்சலிடவே, அருகில் வசிப்பவர்கள் ஓடி வந்து பார்த்தவுடன் கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்தனர்.


