அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு... பி.சி. ஸ்ரீராம் புகாருக்கு அமைச்சர் நடவடிக்கை!!

 
thangam thennarasu thangam thennarasu

மின்வெட்டு தொடர்பான பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் புகாருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார்.

EB

தமிழகத்தில்  மின்வெட்டு பிரச்சனை என்பது தற்போது அதிகமாகியுள்ளது.  குறிப்பாக சென்னையில் தினசரி இரண்டு முதல் ஐந்து முறை மின்வெட்டு ஏற்படுவதன் மூலம் மக்கள் வெகுவாக பாதிப்படைந்துள்ளனர்.  இதனால் மின்வெட்டு ஏற்படுவதை உடனடியாக  சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இந்நிலையில் பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் பக்கத்தில் ஆழ்வார்பேட்டை மற்றும் சாந்தோம் ஆகிய பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலினை டேக்  செய்திருந்தார். இதற்கு பதிலளித்த மின்சார துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,  இப்பிரச்சனை உடனே கண்டறிந்து சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். நாங்கள் சென்னை நகரம் முழுவதும் உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறோம். மின் விநியோகத்தில் சில இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன.  சிரமத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறோம் என்று பதிலளித்துள்ளார்.