“எந்த கூட்டணி யார்கிட்ட போனாலும் கவலை இல்லை”- தங்கம் தென்னரசு

 
Thangam thennarasu Thangam thennarasu

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மல்லாக்கிணறு தனியார் மண்டபத்தில் விருதுநகர் திமுக வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் வருகின்ற நான்காம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை மாவட்ட கழகத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்தும், வாக்காளர் சீரமைப்பு பணி சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

We are balancing welfare outgo with prudent fiscal management: Thangam  Thennarasu - The Hindu

அப்போது பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, “தேர்தல் வருகிறது வருகிறது என்ற சாக்கில் தமிழ்நாட்டினுடைய அரசியல் சூழ்நிலைகள் மாறிக்கொண்டே உள்ளது. நீங்கள் பத்திரிக்கை படிப்பவராக இருந்தாலும், தொலைக்காட்சி பார்ப்பவர்களாக இருந்தாலும் அல்லது ரீல்ஸ் பார்க்கக் கூடியவர்களாக எதிர்பார்க்கக் கூடியவர்களாக இருந்தாலும் எந்தக் கூட்டணி யாரிடம் போகிறது. அப்படி என்று சொல்கிறார்கள். எந்த கூட்டணி யார்கிட்ட போனாலும் கவலைப்படுவதில்லை.. நரி வலம் போனால் என்ன? இடம் போனால் என்ன? நமக்கு கவலையில்லை, நம்மைப் பொருத்தமட்டில் நம்முடைய முதலமைச்சர் கழகத்தின் தலைவர் தளபதி முக ஸ்டாலின் தான் மீண்டும் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் ஆவார். அவர் அமைக்கின்ற கூட்டணி தான் வெற்றி கூட்டணி, இதுவரை அவர் அமைத்த கூட்டணி தான் வெற்றி கூட்டணியாக இருந்திருக்கிறது. இனிமேலும் அவர் அமைக்கக்கூடிய கூட்டணி தான் தமிழ்நாட்டின் வெற்றி கூட்டணியாக அமையும்.

நம்மை எதிர்த்து எந்த புயல் வேண்டுமானாலும் வரலாம் எந்த அரசியல் புயல் வருகிறது என்றும் சொல்கிறார்கள், இன்னைக்கு ஒரு புயல் இங்கே வருகிறது என்று சொல்கிறார்கள், அந்தப் புயல் அங்கே வருகிறது என்று சொல்கிறார்கள். இந்தப் பக்கமாக நகர்கிறது, அந்தப் பக்கமாக நகர்கிறது என்றெல்லாம் சொல்கிறார்கள். எந்த புயலாக வந்தாலும் அந்த புயல்கள் எல்லாம் கடைசியாக புயல் புயல் என்றுதான் சொல்லுவார்கள் வொழிய கடைசியாக வலுவிழந்து வெறும் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி நம்ம ஊர்ல கரையை கடக்காம ஆந்திரா, நெல்லூர், ஒன் போடுன்னு போயி உன்கிட்ட தான் கரையை கடக்கும்வொழிய தமிழ்நாட்டிற்குள் எந்த புயலும் வராது, அப்படியே எந்த புயலாக வருவதாக இருந்தாலும் நம்முடைய முதலமைச்சர்கள் அவர்கள் சொன்னபடி இந்தப் புயலையும் எதிர்கொள்ள, சமாளிப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இருக்கிறது, நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு இந்தியா கூட்டணி தயாராக இருக்கிறது. எனவே அந்த உறுதியோடு தேர்தலை எதிர்கொள்ள கூடிய வகையில் நாம் அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும்” என்று பேசினார்.