முத்துராமலிங்கத் தேவர் படத்துக்கு தவெக தலைவர் விஜய் மலர் தூவி மரியாதை
முத்துராமலிங்கத் தேவர் படத்துக்கு தவெக தலைவர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117ஆவது ஜெயந்தி விழாவும் 62வது குருபூஜை விழாவும் அவரது நினைவிடம் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் கடந்த 28ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 30 ஆம் தேதி பசும்பொன்னில் தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. தமிழக அரசு சார்பில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு. க.ஸ்டாலின் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் மற்றும் குருபூஜை தினத்தையொட்டி, தவெக அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய தவெக தலைவர் விஜய்.#தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay #thevar #MuthuRamalingathevar @tvkvijayhq @actorvijay pic.twitter.com/99eJUxeNEi
— Top Tamil News (@toptamilnews) October 30, 2024
இந்நிலையில் இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட அய்யா பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை தினத்தையொட்டி, தவெக தலைவர் விஜய் அவரது அலுவலகத்தில் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில், “அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார். இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் களமாடியவர். மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையை வலுப்படுத்தத் துணை நின்றவர். பாராளுமன்ற, சட்டமன்ற அரசியலில் முத்திரை பதித்த பேச்சுக் கலைப் பேரரசர். சமூக நல்லிணக்கம் பேணியவர். தமிழக அரசியலின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகவும் மாறிய, மகத்தான மனிதரை அவரது குருபூஜைத் திருநாளில் வணங்கி வாழ்த்திப் போற்றுவோம்” என புகழாரம் சூட்டியிருந்தார்.