80ஸ் நட்சத்திரங்கள் ரீயூனியன்! சென்னையில் களைகட்டிய கொண்டாட்டம்

 
ச் ச்

80-களில் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகர், நடிகைகள் ஓரிடத்தில் சந்தித்து தங்களது நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.

80-களில் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகர், நடிகைகள் ஆண்டுதோறும் ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு சந்தித்து கொள்வதை (reunion) வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் அந்த சந்திப்பின் போது ஒரே நிற ஆடையில் கலந்து கொள்வதும் வழக்கம். மேலும் சந்திப்பின்போது,  பழைய நினைவுகளைப் பகிர்ந்து மகிழ்வது வழக்கம். 


இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு பின், சென்னையில் நேற்று 80-களில் பிரபலமான நட்சத்திரங்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த முறை அனைவரும் புலி போன்ற டிசைன்களில் உருவாக்கப்பட்ட உடையில் அனைத்து நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில், நடிகர் பாக்யராஜ், பிரபு,  சரத்குமார், சுகாசினி, மீனா, குஷ்பூ, நதியா, ரேவதி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.