பாஜக போராட்டம் நடத்தும்னு தொடங்கல.. அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் முத்துச்சாமி..

 
பாஜக போராட்டம் நடத்தும்னு தொடங்கல.. அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் முத்துச்சாமி..  

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போராட்டம் நடத்துவார் என்பதற்காக அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை தொடங்கவில்லை என வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துச்சாமி பதிலடி கொடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக மாநில தலைவர் K.அண்ணாமலை   அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திமுக அரசின் மீது குறை சொல்வதை போல சில கருத்துகளை வெளியிட்டிருக்கிறார். அவற்றிற்கான கீழ்கண்ட விளக்கங்களை கொடுக்க விரும்புகிறேன். இத்திட்டத்தை நிறைவேற்ற தி.மு.க அரசு காலதாமதம் செய்ததாக தெரிவித்துள்ளார். தி.மு.க அரசு அமைந்தவுடன்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அத்திக்கடவு அவிநாசி திட்ட முன்னேற்றம் பற்றி ஆய்வு செய்தார்கள். 

அப்போதுதான் இத்திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தியதில், முதல் பம்பிங் ஸ்டேசனிலிருந்து மூன்றாவது பம்பிங் ஸ்டேசன் வரை மெயின் பை லைன் அமைக்க பல இடங்களில் நிலம் கையகப்படுத்தப்படவில்லை என்பது தெரிய வந்தது. அந்த நிலம் இல்லையென்றால் முழுதிட்டமுமே பயனற்றுத்தான் கிடக்கும்.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அதிகாரிகள் இடத்திலேயும் எங்கள் இடத்திலேயும் அந்த நில உரிமையாளர்களை சந்தித்து பேசி நிலம் கையகப்படுத்துகிற பணியை உடனடியாக செய்யவேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். 

பாஜக போராட்டம் நடத்தும்னு தொடங்கல.. அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் முத்துச்சாமி..  

நாங்கள் ஒவ்வொரு விவசாயினுடைய வீட்டிற்கும் நேரடியாக சென்று இத்திட்டத்திற்கு தேவையான நிலத்தை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். இத்திட்டத்தில் பம்பிங் ஸ்டேசன் மூன்றுக்கு கீழே உள்ள விசைாயிகளுக்கு எந்த பயனும் இல்லை என்றாலும் மேலே உள்ள மற்ற பல விவசாயிகளுக்கு இத்திடத்தின் மூலம் பயன் கிடைக்கும் என்ற உணர்வோடு தேவையான நிலத்தை கொடுப்பதற்கு பெருந்தன்மையோடு அவர்கள் ஒப்புதலை தந்தார்கள்.

அந்த ஒப்புதலை 29-09-2022 அன்றுதான் முழுமையாக பெறமுடிந்தது. அதன் பின் மெயின் லைனில் பணிகள் துவக்கி 4மாத காலகட்டத்திற்குள் அதாவது 2023 ஜனவரி 23ஆம் தேதி அன்று பணிகள்முடிக்கப்பட்டது. பணி முடிந்தவுடன் சோதனை ஓட்டமாக தண்ணீர் எடுக்கப்பட்டது. அப்போதுதான் ஏற்கனவே அமைக்கப்பட்ட கிளைக் குழாய்கள் பல இடங்களில் உடைந்தும் பழுதடைந்தும் இருப்பது தெரிய வந்தது. அவற்றையெல்லாம் உடனடியாக சரி செய்வதற்க்கான நடவடிக்கை வேகமாக எடுக்கப்பட்டது. உபரிநீர் போதிய அளவிற்கு கிடைக்காத காரணத்தால் சோதனை ஓட்டத்தை முழுமையாக நடத்த முடியவில்லை.

தற்போது தண்ணீர் மீண்டும் வந்த பின்தான் சோதனை ஓட்டம் வேகமாக செய்யப்பட்டு 1045 குளங்களில் சில வற்றை தவிர மற்ற அனைத்திற்கும் தண்ணீர் செலுகிற நிலை உருவாக்கப்பட்டது. உபரி நீர் மட்டும்தான்  இத்திட்டத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.  

தற்போது வரும் உபரிநீரை மட்டும் வைத்துக் கொண்டு தொடர்ச்சியாக தண்ணீர் கொடுத்துவிட முடியும் என்று உறுதிபடுத்த முடியாது. கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதில் இருந்து 15 நாட்களுக்கு மேல் கசிவு நீர் வருவதற்கான வாய்ப்பு உள்ளதென்றும், அப்படி வருகிற பொழுது தொடர்ச்சியாக அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு தண்ணீர் கொடுக்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

இந்த நிலைமைகளையெல்லாம் கணக்கிட்டுதான் 15.08.2024 அன்று LBP வாய்க்கால் தண்ணீர் திறக்கப்பட்ட பின்  அத்திக்கடவு அவினாசி திட்டத்தை 17.08.2024 அன்று திறத்து வைக்க முடிவெடுக்கப்பட்டது. பாரதிய ஜனதா  கட்சி போராட்டம் நடத்தும் என்ற காரணத்தால்தான் திட்டம் துவங்கப்படுவதாக அண்ணாமலை அவர்கள் சொல்லுவது முழுக்க முழுக்க தவறானதாகும். உபரிநீர் பற்றாக்குறையே இத்திட்டம் துவங்க காலதாமதம் ஆனதற்கு காரணம் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. 

பாஜக போராட்டம் நடத்தும்னு தொடங்கல.. அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் முத்துச்சாமி..  

முதலமைச்சர் , நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் முன்னிலையில் அதிகாரிகளோடு இத்திட்டம் பற்றி விவாதித்து ஆய்வு செய்தார்கள். மற்ற விவசாயிகள் யாரும் பாதிக்கப்பட்டு விடாத வகையில் தொடர்ச்சியாக அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு தண்ணீர் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்கள். அதையெல்லாம் தீர ஆய்வு செய்துதான் வருகிற 17 ஆம் தேதி திட்டத்தை துவக்கலாம் என்று அக்கூட்டத்தில் முடிவெடுத்தார்கள்.
 
இந்த உண்மைகளை  அண்ணாமலை அவர்கள் புரிந்து கொள்ளுவார் என்று நம்புகிறேன். நில உரிமையார்களுக்கு இழப்பீடு கொடுப்பது பற்றியும் அவர் தெரிவித்துள்ளார். இத்திட்டம் துவங்கப்பட்ட காலத்தில் இருந்து குழாய் பதிக்கப்பட்ட நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை.
திராவிட முன்னேற்ற கழக அரசுதான் அதிகாரிகள் மூலமாக நில உரிமையாளர்கள் இடத்தில் பேசி நில பயன்பாட்டிற்கான இழப்பீடு தொகையை நிர்ணயித்து அரசானை வெளியிட்டு நிதியும் ஒதுக்கீடு செய்து இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. 

இன்னும் சில நாட்களில் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை சென்றடையும். சில நில உரிமையாளர்களோடு இழப்பீடு சம்பந்தமாக ஒப்பந்தம் முடியாமல் இருந்தது. தற்போது இழப்பீடு தொகையை பெற்று கொள்ள அதில் பல பேர் ஒப்புதல் வளங்கியுள்ளர்கள். அவர்களுக்கு தனியே அரசாணை வெளியிடுவதற்கும். இழப்பீடு தொகை வழங்குவதற்கும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக  தமிழ்நாடு முதலமைச்சர், நீர்வளத்துறை அமைச்சர் அவர்களும் பல முறை அதிகாரிகளோடு மிகுந்த அக்கறையோடு ஆய்வை மேற்கொண்ட காரணத்தால்தான் இத்திட்டம் தற்போது பயன்பாட்டிற்கு வருகிற நிலை உருவாகியுள்ளது என்பதை அன்போடு அனைவருக்கும் தெரிவித்துகொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.