தீராத சந்தேக வெறி! சிறுவனுக்கு 19 இடங்களில் சூடு வைத்த தந்தை
மன்னார்குடி அருகே கணவன், மனைவி மீது சந்தேகம் தனது மகன் உடம்பில் 19 இடத்தில் தோசை பிரட்டில் சூடு வைத்த தந்தையால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஒரத்தூர் மேலத்தெரு சேர்ந்தவர் ராஜ் கண்ணன். இவர் சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உமா. இவரது மகன் அமுதன் ஆகியோர் ஒரத்தூர் கிராமத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் ராஜ்கண்ணன் தாயார் வரதட்சணை கேட்டு மருமகள் உமாவுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இதனை பார்த்த ராஜ்கண்ணன் தனது மனைவி மற்றும் மகன் ஆகியோரை சென்னைக்கு அழைத்துச் சென்று அங்கேயே ஒரு தனியார் பள்ளியில் மகனை படித்து வைத்துள்ளார்.
ராஜ்கண்ணன் தனது மனைவி மீது சந்தேகப்பட்டு தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். மனைவி மீது சந்தேகப்பட்டு தனது மகன் அமுதனை தோசை பிரட்டி சூடு வைத்து மகன் அமுதன் உடம்பில் 19 இடத்தில் சூடு வைத்துள்ளனர். இதனால் அமுதன் துடி துடித்து கதறியுள்ளார் இதனைப் பார்த்து தாய் கதறி அழுது தனது மகனை பலத்த காயங்களுடன் சென்னையில் இருந்து புறப்பட்டு சொந்த கிராமத்திற்கு வந்து மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பலத்த காயங்களுடன் அமுதன் சிகிச்சை பெற்று வருகிறார். மனைவி மீது சந்தேகம் தனது மகனை 19 இடத்தில் தீயால் சுட்ட தந்தை பலத்த தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் மன்னார்குடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


