பெண்ணின் மேலாடையை கிழித்து மரத்தில் கட்டி வைத்து நடந்த கொடூரம்!

 
ச் ச்

பண்ருட்டி அருகே இட பிரச்சினை தகராறில் ஒரு பெண்ணை மரத்தில் கட்டி வைத்து உடைமைகளை கிழித்து மானபங்கம் செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள நெல்லிதோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்காரவேல் மனைவி செல்வராணி (60), இவருக்கும் உறவினரான அனுராதா, ஜெயந்தி, ஜெயப்பிரதா ஆகியோருக்கும் இடையே 21 சென்ட் இடத்தில் வீடு கட்டுவது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்களுக்குள் மீண்டும் ஏற்பட்ட தகராறில் பெண்கள் மூன்று பேரும் சேர்ந்து செல்வராணியை ஒரு மரத்தில் அவர் அணிந்திருந்த சேலையால் கட்டி வைத்து ஆடைகளை கிழித்து மானபங்கம் செய்து தாக்கியுள்ளனர்.


இது சம்பந்தமான செல்வராணி தாக்கக்கூடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து செல்வராணி காடாம்புலியூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, பெண்ணைத் தாக்கி மானபங்கம் செய்ததாக அனுராதா (33) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.