முதலமைச்சருக்கே நம்பிக்கை இல்லை.. ‘அப்போலோ தரத்திற்கு அரசாங்க மருத்துவமனைகளும் இருக்க வேண்டும்’ - தமிழிசை சௌந்தரராஜன்..!
தமிழகத்தில் கோடீஸ்வரர்களுக்கு கிடைக்கும் மருத்தும் கோடியில் கிடக்கும் சமானியனுக்கும் கிடைக்க வெண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று தமிழகத்தில் அனைத்து மருத்துவமனையிலும் மக்களுக்கான முழுமையான வசதி இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்.. நான் எப்பொழுதெல்லாம் நிர்வாகத்தில் இருந்தேனோ அப்பொழுதெல்லாம் அரசாங்க மருத்துவமனைகளை மேம்படுத்துதற்காக தனிக் கவனம் செலுத்தியிருக்கிறேன் .. கரோனா காலத்தில் ஆக்சிஜன் முதற்கொண்டு எந்த பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக் கொண்டேன்.
கொரோனா காலத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் மறுத்த பின்பும் பி பிபிஇ அணிந்து கொண்டு. கரோனா தொற்றும் ஆபத்து இருந்தாலும் அரசாங்க மருத்துவமனைகளில் எல்லா வசதிகளும் இருக்கிறதா என்று மேற்பார்வை பார்த்திருக்கிறேன் இல்லாத வசதியும் மேம்படுத்த உதவி இருக்கிறேன்.. இது புதுச்சேரியில் நடந்தது தெலுங்கானாவிலும் நடந்தது... புதுச்சேரியில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த மூன்று குழந்தைகள் பேருந்து மோதியதால் படுகாயம் அடைந்து புதுச்சேரி அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். மிக மிக ஆபத்தான நிலையில் அவர்கள் இருந்தார்கள்.. அந்த குழந்தைகளின் பெற்றோர் ... எப்படியாவது குழந்தைகளை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று விடுகிறோம்.. எங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து தாருங்கள் என்று சொன்னார்கள்.. மிக ஆபத்தான இருந்த அந்த குழந்தைகளை சென்னைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார்கள்

துணைநிலை ஆளுநராக குழந்தைகளின் நிலையைக் கண்டு உடனே அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே குழந்தைகள் பிழைப்பார்கள் என்பதை உணர்ந்து அவர்கள் பெற்றோர்களிடம் நீங்கள் தனியார் மருத்துவமனையில் தேடும் அத்தனை வசதிகளும் இங்கே இருக்கிறது. எங்களால் குழந்தைகளை காப்பாற்ற முடியும் என்று உறுதியாகச் சொன்னேன்... அங்குள்ள அதிகாரிகளும் மருத்துவர்கள் கூட சற்று தயங்கினார்கள் குழந்தைகளுக்கு ஏதாவது ஆகிவிட்டால் நம் மீது பழி சொல்வார்கள் என்றார்கள்.. அதற்காக குழந்தைகளை பலியாக்க முடியாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.. மூன்று குழந்தைகளுக்கும் அரசாங்க மருத்துவமனையிலேயே சிகிச்சை நடந்தது மூன்று குழந்தைகளுக்கும் அரசாங்கம் மருத்துவமனிலேயே அறுவை சிகிச்சை நடந்தது குழந்தைகள் பிழைத்தார்கள் இத்தகைய நிலையில் அரசாங்க மருத்துவமனைகள் செயலாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம்

ஆனால் தமிழகத்தில் முதலமைச்சர் உட்பட நம்பிக்கையுடன் சென்று சிகிச்சை பெரும் அளவிற்கு அரசாங்க மருத்துவமனைகள் இல்லையே என்பதுதான் எனது ஆதங்கம்.. கோடீஸ்வரர்களுக்கு கிடைக்கும் சிகிச்சை கோடியில் வாடிக் கொண்டிருக்கும் சாமானியனுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எனது ஆதங்கம்
புதுச்சேரியில் தடுப்பூசி போடப்பட்ட போது கூட. அதை அரசாங்க மருத்துவமனைக்குச் சென்று தான் நான் போட்டுக் கொண்டேன்... அந்த நிலை தமிழகத்தில் ஏன் இல்லை என்று தான் எனது ஆதங்கம்... எல்லோர் உடல் நிலையும் ஒன்றுதான் எல்லோரின் இதயமும் தன் குடும்பத்திற்காக தான் அடித்துக் கொண்டிருக்கிறது... ஆனால் ஏழையின் இதயத்திற்கு கிடைக்க வேண்டிய பாதுகாப்பு அரசாங்க மருத்துவமனையில் கிடைக்கவில்லையே என்பதுதான் எனது வேதனை எனது வேதனை... அதை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவே முதல்வரும் செல்லும் அளவிற்கு அரசாங்க மருத்துவமனைகள் இருக்க வேண்டும்.. அப்போலோ தரத்திற்கு அரசாங்க மருத்துவமனைகளும் இருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தை தான் நான் வெளிப்படுத்துகிறேன் தவிர இதில் அரசியல் இல்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.


