“அந்த மனசு தான் சார் கடவுள்”... வைர நெக்லஸை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளர்!
Updated: Jul 21, 2024, 18:47 IST1721567842949
சென்னை விருகம்பாக்கத்தில் குப்பைகளுடன் கிடந்த வைர நெக்லஸை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விருகம்பாக்கம் ராஜமன்னார் சாலையில் உள்ள விண்ட்சர் பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தேவராஜ் என்பவர் குப்பைகளுடன் வைர நெக்லஸை தவறிவிட்டார், அதன் மதிப்பு ரூ.5 லட்சமாகும். வீட்டிலிருந்த குப்பையுடன் வைர நெக்லஸ் குப்பை தொட்டிக்குள் போய் இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. உடனடியாக அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டிந்த அந்தோணிசாமியின் உதவியை நாடிய அவர், அவரது வீட்டின் அருகே இருந்த குப்பை தொட்டிக்குள் தேடி நெக்லசை தேடினார். அதில் வைர நெக்லஸ் இருந்துள்ளது. உடனே குப்பையிலிருந்து வைர நெக்லஸை மீட்ட தூய்மை பணியாளர் அந்தோணிசாமி, அதனை உரிமையாளரிடம் கொடுத்தார்.


