ஆட்சியில் பங்கு தருபவர்களுக்கே கூட்டணி..! புதிய தமிழகம் கட்சி மாநாட்டில் டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி!

 
1 1

மதுரை பாண்டி கோயில் சுற்றுவழிச் சாலையில் அமைந்துள்ள அம்மா திடலில் புதிய தமிழகம் கட்சியின் 7வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும், 2026 தேர்தல் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும், திமுக ஆட்சி அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, தேவேந்திரகுல வேளாளர்கள் அனைவரும் நாம் ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

திமுக ஆட்சி தவறு மேல் தவறு செய்வதாக கூறினார். திமுக ஆட்சி இருக்கும் வரை எந்த திட்டங்களும் மக்களை சென்று சேராது என குற்றம்சாட்டிய அவர், திமுக ஆட்சிக்கும் விடை கொடுப்பதுதான் ஒரே வழி என தெரிவித்தார்.

வெனிசுலா அதிபர் செய்த குற்றச்சாட்டை விட மிகப்பெரிய தவறுகளை தமிழக முதலமைச்சர் செய்துள்ளதாக குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் மதுக்கடைகளை திறந்து வைத்து உள்ள முதலமைச்சருக்கு என்ன தண்டனை கொடுப்பது என கேள்வி எழுப்பினார். மேலும், ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி அமைக்கும் என கிருஷ்ணசாமி கூறினார்.