தமிழகம் முழுவதும் உடனே அமலுக்கு வந்த நடத்தை விதிகள்..! என்ன செய்யலாம்..? என்ன செய்ய்யக்கூடாது..?
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23- ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வரும் மே 04- ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
அதன்படி,
- ரூபாய் 50,000-க்கு மேல் ரொக்க பணம் கொண்டு சென்றால் உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும்.
- தலைவர்களின் படங்கள், சிலைகளை திரைப்போட்டு மூடப்பட வேண்டும்.
- அரசு சார்பில் புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியிட முடியாது.
- இரவு 10.00 மணிக்கு மேல் பொதுக்கூட்டங்களை நடத்தக்கூடாது.
- பரப்புரை, மேடை பேச்சு, பொது நிகழ்ச்சி என அனைத்திற்கும் தேர்தல் ஆணையத்தில் முன் அனுமதி பெற வேண்டும்.
- பரப்புரையில் போது கட்சிகளுடைய செயல்பாடுகளைத் தவிர்த்து தனிநபர் விமர்சனம் செய்யக்கூடாது.
- கட்சி பாகுபாடியின்றி பொது மைதானங்களைப் பயன்படுத்த முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேபோல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோரின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன. அத்துடன், அரசுத் திட்டங்கள் சார்ந்த புகைப்படத்தையும் அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும், சாலைகளில் உள்ள சுவர்களில் வரையப்பட்டிருந்த அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் மற்றும் கட்சிகளின் விளம்பரத்தை மாநகராட்சி ஊழியர்கள் அழித்தனர்.

