“காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு”- ஒரே நாளில் 5,000 புத்தகங்கள் விற்பனை
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு எனும் புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இதுவரை 5 ஆயிரம் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவுற்றதை முன்னிட்டு ' திமுக -75' அறிவுத் திருவிழா நிகழ்ச்சியை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றுதொடங்கி வைக்கிறார். அறிவுத் திருவிழாவில் முற்போக்கு புத்தகக் காட்சி என பெயரிடப்பட்ட புத்தக காட்சி அரங்குகளை வள்ளுவர் கோட்டம் வளாகத்தில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். நவம்பர்16 ம் தேதி வரை புத்தக காட்சி நடைபெற உள்ள நிலையில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள், புத்தகங்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு ' எனும் நூலை ஏராளமானோர் ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர். முதல் பதிப்பான 5 ஆயிரம் புத்தகம் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. திராவிட இயக்கம் மற்றும் திமுக இதுவரை தமிழ்நாட்டிற்கு செய்த நன்மைகள் அனைத்தும் இந்த புத்தக்கத்தில் ஆவண படுத்தப்பட்டுள்ளது என வாசகர்கள் தெரிவித்தனர்.
முற்போக்கு பதிப்பகங்கள் மட்டும் இந்த புத்தக காட்சியில் இடம்பெற்றுள்ளது சிறப்பான முன்னெடுப்பு என்றும் திராவிட இயக்க வரலாறு அம்பேத்கர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களின் புத்தகங்கள், சாதி ஒழிப்பு, பெண்ணியம் குறித்த புத்தகங்கள் என தமிழ்நாடு இளைஞர்களுக்கு அரசியல் புரிதலை ஏற்படுத்தும் புத்தகங்கள் பல புத்தகங்கள் புத்தக காட்சியில் இடம்பெற்றுள்ளது. அரசியல் என்றால் என்னவென்றே தெரியாமல் நடிகரின் பின்னால் சுற்றிக்கொண்டிருக்கும் இளைஞர்களை அரசியல் படுத்த இதுபோன்ற புத்தக கண்காட்சிகள் மிக அவசியமானது என வாசகர்கள் தெரிவித்தனர்.


