"பாஜக அரசின் ஆட்சி முடிவுக்கான கவுன்ட்டவுன் தொடங்கியுள்ளது" - ஆர்.எஸ்.பாரதி

 
RS Bharathi

அமைச்சர் பொன்முடி வீட்டில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை திசைதிருப்பவே சோதனை நடத்தப்பட்டு வருவதாக ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார்.

Ponmudi

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,  அமைச்சர் பொன்முடியை சந்திக்க எங்களை அனுமதிக்கவில்லை. அமலாக்கத்துறை வழக்குகளில் இதுவரை குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதா? மத்திய பாஜக அரசின் ஆட்சி முடிவுக்கான கவுன்ட்டவுன் தொடங்கியுள்ளது. பாஜக இதுபோன்று தொடர்ந்து செய்தால், கர்நாடகாவில் ஏற்பட்ட நிலைதான் நாடு முழுவதும் ஏற்படும். அமலாக்கத்துறை அதிகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

rs

எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை திசைதிருப்பவே சோதனை. யார் பிரதமராக வரக்கூடாது என்பதே முக்கியம் என்ற முழக்கத்தை முதல்வர் ஸ்டாலின் முன்வைத்ததில் இருந்தே நெருக்கடி. எதற்காக இந்த சோதனை என்பதை தெரிந்துகொள்ளும் உரிமை வழக்கறிஞர்களுக்கு உள்ளது.எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் பாஜக அமலாக்கத்துறையை ஏவி வருகிறது. அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்கை வைத்து மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. திமுக எந்த மிரட்டலுக்கும் அஞ்சாது என்றார்.