கரூர் கூட்ட நெரிசலுக்கு காரணமானவர்கள் மீது விஜய் எடுத்த அதிரடி நடவடிக்கை
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றதில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் மூன்று டிஎஸ்பிக்கள் உட்பட 19 காவல்துறையினரை கூண்டோடு பணியிட மாற்றம் செய்து தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முக்கியமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது , கூட்டணி இசை காரணமாக 41 பேர் உயிரிழந்தனர் இது நாடு முழுவதும் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. கரூர் தேர்தல் பிரச்சாரம் பாதுகாப்பு பணியில் இருந்த டிஎஸ்பி செல்வராஜ், ஆய்வாளர் மணிவண்ணன் உட்பட பெரும்பாலான காவலர்கள் இந்த பணியிட மாற்றத்தில் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக டிஎஸ்பி செல்வராஜ் ஆய்வாளர் மணிவண்ணனும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளாக இருந்த ஆனந்த் ,ஆதவ் அர்ஜுனா, சி டி ஆர் நிர்மல் குமார் ஆகியோரிடம் கூட்ட நெரிசல் பற்றி கூறி பல அறிவுரைகள் கூறியும் கேட்காமல் செயல்பட்டதால் கரூரில் கூட்டணி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்ததாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக ஆய்வாளர் மணிவண்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆன தற்போதைய அமைச்சர்களாக இருக்கும் ஆனந்த் ,ஆதவ் அர்ஜுனா, சி டி ஆர் நிர்மல் குமார் மற்றும் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது கரூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டது. அதன் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஐ ஜி அஸ்ரா கார்க்கை தான் தற்போது தமிழக காவல்துறையின் முக்கிய உயர் பதவியான உளவுத்துறை ஐஜியாக தமிழக அரசு நியமித்துள்ளது. மேலும் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் தற்போதைய முதல்வர் ஆக இருக்கிற விஜய், அமைச்சர்களாக இருக்கிற ஆனந்த் அர்ஜுனா சி டி ஆர் நிர்மல் குமார் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவரையும் சிபிஐ விசாரணை நடத்தியது.குறிப்பாக தற்போது கரூர் மாவட்டத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட டிஎஸ்பி செல்வராஜ் ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்டோரையும் சிபிஐ விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்த நகர் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உட்பட 19 பேரை தெற்கு மற்றும் வடக்கு மண்டலங்களுக்கு பணியிட மாற்றம் செய்து காவல்துறை தலைமை இயக்குநரகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் பணியாற்றி வந்த துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தனிப்பிரிவு காவலர்கள் என பலர் தெற்கு மற்றும் வடக்கு மண்டலங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கரூர் டவுன் டிஎஸ்பி செல்வராஜ் தூத்துக்குடி மாவட்டத்திற்கும், குளித்தலை டிஎஸ்பி கடலூர் மாவட்டத்திற்கும், அரவக்குறிச்சி டிஎஸ்பி அப்துல் கபூர் தர்மபுரி மாவட்டத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் மணிவண்ணன், கரூர் நகர காவல் ஆய்வாளர் அருள் பிரகாஷ் உள்ளிட்ட 10 காவல் ஆய்வாளர்கள் தெற்கு மற்றும் வடக்கு மண்டலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தனிப்பிரிவு சிறப்பு உதவி காவல் ஆய்வாளர், தலைமை காவலர்கள் என 5 பேர் தெற்கு மற்றும் வடக்கு மண்டலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை தலைமை இயக்குனரகம் மூலமாக இந்த பணியிட மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

