வீரமே வாகை சூடும் திரைப்பட நடிகை செய்த கேவலமான செயல்..! கணவருடன் சேர்ந்து பணிப்பெண்ணை...
ஒடிசாவை சேர்ந்த 22 வயதே ஆன இளம் பெண் ஒருவர் டிபிள் ஹயாதி வீட்டில் பணி பெண்ணாக கடந்த மாதம் 22ஆம் தேதி பணியில் சேர்ந்துள்ளார்.டிம்பிள் ஹாயதி தமிழில் நடிகர் விஷால் நடித்த வீரமே வாகை சூடும் திரைப்படத்திலும், பிரபுதேவாவின் தேவி 2 திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இவர் தன் வீட்டில் வேளைக்கு சேர்ந்த பணிப்பெண்ணை கணவருடன் சேர்ந்து கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், அவமானம் படுத்தியதாகவும், உணவு கொடுக்காமல் சித்திரவதை செய்துவது மட்டுமில்லாமல் கெட்ட வார்தைகளால் திட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 29ஆம் தேதி டிம்பிள் ஹயாதி வீட்டில் நாய் தொடர்ந்து குறைத்துக் கொண்டே இருந்தது. இதனால், ஆத்திரமடைந்த நடிகையும் அவரது கணவரும் சேர்ந்து கொண்டு, எனது கால் ஷூவிற்கு உனது வாழ்க்கை ஈடாகாது என மோசமான வார்த்தையால் திட்டியதோடு, பெற்றோரை கொலை செய்து விடுவோம் என மிரட்டியதாக கூறி உள்ளனர். இவர்கள் செய்யும் டார்ச்சர் அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்ய முயற்சித்தபோது என் ஃபோனை நடிகையின் கணவர் உடைத்து விட்டார். மேலும் இருவரும் சேர்ந்து எனது ஆடை கிழிந்து விட்டனர். நான் அரை நிர்வாணமாக இருக்கும் போதே, என்னை அந்த கோலத்தில் வீடியோவாக எடுத்தார்கள். நான் எப்படியோ அங்கிருந்து தப்பி வந்து விட்டேன் என்று புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து நான்கு பிரிவுகளில் பிலிம் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
27 வயதே ஆன டிம்பிள் ஹாயதி,கடந்த 23 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரியின் கார் மீது செருப்பு வீசிய சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


