தானாக மூடிக்கொண்ட கதவு.. நகைக்கடை உள்ளே சிக்கிக்கொண்ட பொதுமக்கள்..

 
நகைக்கடை கதவு

தூத்துக்குடியில் பிரபல நகை கடையின் முன்பக்க கதவு திடிரென தானாக மூடிக்கொண்டதால்  வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளேயே சிக்கிக்கொண்டனர்.  நீண்ட நேரம் போராடி கதவை உடைத்து சிக்கியவர்களை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.  

தூத்துக்குடி தமிழ் சாலையில் உள்ள பிரபல நகை கடையான கல்யாண் ஜூவல்லரிஸ் அமைந்துள்ளது.  இந்நிலையில் நேற்று  வழக்கம்போல் கடை செயல்பட்டு கொண்டு இருக்கும்போது இரவு  திடிரெனெ நகைக் கடையின்  முன்பக்க ஹைட்ராலிக் ஷட்டர் கதவு தானாக மூடிக்கொண்டது. இதனால்  கடை உள்ளே இருந்த வாடிக்கையாளர்கள், குழந்தைகள் மற்றும் ஊழியர்கள் கடைக்குளேயே சிக்கிக்கொண்டனர். நீண்ட நேரமாகியும் கதவை திறக்கமுடியாததால்  கடையின் உள்ளே இருந்த வாடிக்கையாளர்களின்  குழந்தைகள் அச்சத்தில்  அலறி அழுதனர். 

நகைக்கடை கதவு

இதனால் உடனடியாக உள்ளே இருந்த நகை கடை ஊழியர்கள்  தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து வந்த தீயனைப்பு துறையினர் நகைக் கடையின் முன்பக்க சட்டர் கதவை உடைத்து உள்ளே இருந்த வாடிக்கையாளர்கள், சிறுவர்கள் மற்றும் நகை கடையின் ஊழியர்கள் என 25 பேரை பத்திரமாக மீட்டனர்.  நகைக்கடையின் கதவு தானாக மூடிக்கொண்டு, பொதுமக்கள் உள்ளே சிக்கிக்கொண்ட  சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.