சுவாமிமலை கோயிலில் படுத்திருந்த பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றிய ஊழியர்கள் பணியிடைநீக்கம்

 
ச்

சுவாமிமலை கோவில் வளாகத்தில் பக்தர்கள் இரவு நேரத்தில் தங்க இடையூறு விளைவித்ததாக கூறி கோவில் பணியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். .


முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலாக விளங்குவது கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிநாத சுவாமி ஆலயமாகும்.இந்த ஆலயத்தில் இரவு நேரங்களில் பக்தர்கள் தங்கி வந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் இருந்து பக்தர்கள் கோவில் வளாகத்தில் இரவு வேலைகள் தங்க அனுமதிப்பதில்லை.


இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி இரவு 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமிமலை கோவில் அலுவலகம் அருகே தங்கியிருந்தனர். அப்போது பக்தர்கள் தங்குவதற்கு இடையூறு விளைவிக்க வகையில் கோவில் பணியாளர்கள் தரையில் தண்ணீர் ஊற்றியதாக கூறப்படுகிறது. இதனால் பக்தர்களுக்கும் கோயில் பணியாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் பக்தர்கள் தங்குவதற்கு இடையூறாக தரையில் தண்ணீர் ஊற்றியதாக கூறப்படும் கோவில் இரவு காவலர்கள் சுப்பிரமணியன் மற்றும் சின்னதுரை ஆகிய இருவரை கோவில் துணை ஆணையர் உமாதேவி பணியிடை நீக்கம் செய்து இன்று உத்தரவிட்டுள்ளார்.