போடுற வெடிய... அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி..!!
மகளிர் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சர்வேதேச கிரிக்கெட் கவுசில் ஏராளமான தொடர்களை நடத்தி வரும் நிலையில் தற்போது 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .
இந்த தொடரில் நடைபெற்ற போட்டியில் இந்திய – நேபால் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இந்த போட்டியில் நேபால் அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 178 ரன்கள் குவித்தது . இந்திய அணியில் அதிகபட்சமாக ஷபாலி வர்மா 81 ரன்களும் ஹேமலதா 47 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நேபால் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை ஒப்புக்கொண்டது . இதன்மூலம் 82 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் அரையிறுதிக்கு கெத்தாக முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.