குடிப்பழக்கத்தால் ஒரு மிகப் பெரிய மனிதனை இந்த குடும்பம் இழந்து நிற்கிறது - பாடகர் அந்தோணி தாசன் அறிவுரை!
நடிகர் ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்து, வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட ரோபோ சங்கரின் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் தனுஷ் உள்ளிட்ட பலரும் உடனடியாக நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தர்ராஜன், அண்ணாமலை, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், நடிகர் ரஜினி காந்த், டி.ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் இரங்கல் செய்தி வெளியிட்டனர்.
இந்நிலையில், ரோபோ சங்கர் மறைவு குறித்து பேசிய பாடகர் அந்தோணி தாசன்"மது அருந்துபவர்கள் அந்த பழக்கத்தை கைவிட வேண்டும். குடிப்பழக்கத்தால் ஒரு மிகப் பெரிய மனிதனை இந்த குடும்பம் இழந்து நிற்கிறது.
பேரனை கொஞ்சி சந்தோசமாக இருக்க வேண்டிய நேரத்தில் உயிரிழந்துள்ளார். குடிதான் வாழ்க்கை என நினைப்பவர்கள் இவரின் வாழ்க்கையை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள்"
ரோபோ ஷங்கர் மறைவுக்கு நடிகர் கார்த்திக் இரங்கல்
காலப்போக்கில் நாம் செய்யும் மோசமான தேர்வுகள் உடல் நலனை எப்படியெல்லாம் சிதைக்கிறது என்பதைப் பார்க்கவே மிக வேதனையாக உள்ளது. மிகவும் திறமையான நடிகர் விரைவாகவே காலமாகிவிட்டார். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்"


