‘தலைவராக வழிகாட்டிய தந்தை..’ - மு.க.ஸ்டாலின், பழனிசாமி தந்தையர் தின வாழ்த்து..

 
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

தந்தையர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  


உலகளவில் வெவேறு தேதிகளில் அங்கீகரிக்கப்பட்ட தந்தையர் தினம், பொதுவாக ஜூன் மாதத்தின் 3வது ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு இன்றைய தினம் ‘தந்தையர் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. குடும்ப உறவுகளில் அசைக்க முடியாத ஆணிவேர் போன்றது தந்தை எனும் உறவு. ஒரு நண்பராக, வழிகாட்டியாக, ஆலோசகராக, தலைவனாக என  தந்தையர்கள் வகிக்கும் ஒவ்வொரு பாத்திரங்களும் ஒரு நிலையான வலிமையுடன் குடும்பத்தை வழிநடத்துறது. அத்தகைய தந்தையருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் இந்த நாளில்,  தந்தையர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.   

அந்தவகையில் முதலைச்சர் மு.க.ஸ்டாலின் முத்தமிழறிஞர் கலைஞருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிந்து தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில், “தலைவராக வழிகாட்டிய தந்தை! தந்தையாக நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கிய தலைவர்!” என்று குறிப்பிட்டுள்ளார். 

Image

 இதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது பதிவில், “"இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு, பிள்ளைகளை அன்போடு வளர்த்து, உழைப்பின் மூலம் வழிகாட்டி, தன் குடும்பத்தின் அடித்தளமாய்த் திகழும் அனைத்து உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Image

தமிழ்நாட்டின் கொள்கைத் தந்தைகளாக, இன்றளவும் நம்மை வழிநடத்தும் தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆகிய ஒப்பற்ற தலைவர்களுக்கும் இந்நாளில் எனது புகழ் வணக்கத்தை செலுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.