மேடையில் செல்ஃபி வீடியோ எடுத்த முதல் முதலமைச்சர்
Updated: May 10, 2026, 11:18 IST1778392126912
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று பேசிய பிறகு வீடியோ செல்ஃபி எடுத்தார் முதலமைச்சர் விஜய்.

தமிழ்நாட்டின் 13-ஆம் முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜயும், அவருடன் 9 பேர் கொண்ட அமைச்சரவையும் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர். புதிய முதலமைச்சருக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பதவியேற்பு விழா முடிந்தவுடன், மேடையில் உரையாற்றிய விஜய், சந்தோஷத்தின் உச்சத்தில் அனைவருடன் செல்பி வீடியோ எடுத்துக்கொண்டார். கரை வேஷ்டி, வெள்ளை சட்டையுடன் இதுவரை இருந்த தமிழக அரசியல், கோட் சூட், செல்பி என புதிய ட்ரெண்டை நோக்கி நகர்ந்துள்ளது.

