"முதலமைச்சர் முடிவில் ஆளுநர் தலையிட முடியாது" - சபாநாயகர் அப்பாவு பேட்டி

 
appavu

முதலமைச்சர் முடிவில் ஆளுநர் தலையிட முடியாது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

stalin

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.  இருப்பினும் அமைச்சர் செந்தில் பாலாஜியை காவிரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  அவர் தொடர்ந்து நீதிமன்ற காவலில் இருப்பார் என்றும் அமலாக்க துறையின் மருத்துவர்கள் அவரை சென்ற பார்க்கலாம் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.  இதனிடையே செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை நெருக்கடி கொடுப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ள நிலையில்,  செந்தில் பாலாஜி அமைச்சரவையை  வேறு அமைச்சர்களுக்கு மாற்றி கொடுப்பதற்கு ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

appavu

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நாகர்கோவிலில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது, "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை ஒதுக்க வேண்டும் என முடிவெடுக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு தான் உள்ளது; முதல்வரின் அதிகாரத்தில் தலையிட யாருக்கும் அதிகாரம் கிடையாது.வழக்கு இருப்பதாலேயே ஒருவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க தேவையில்லை . முதலமைச்சரின் கடிதத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியது வேதனையாக உள்ளது. அதை தவிர்த்திருக்க வேண்டும்; ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார். ஆளுநர் சட்டப்படி சட்ட ஆலோசனைகளை பெற்று நடந்து கொள்ள வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.