மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த கணவரால் பரபரப்பு
மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த கணவர் குன்றத்தூர் அருகே மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவரால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை, குன்றத்தூரை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி சுகன்யா. நிறை மாத கர்ப்பிணியாக இருந்த சுகன்யாவுக்கு வீட்டில் இருக்கும்போது இன்று மாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே வீட்டிலேயே மனோகரன், சுகன்யாவுக்கு பிரசவம் பார்த்துள்ளார். வாட்ஸ் ஆப் குழுவில் வந்த தகவலை பார்த்து வீட்டிலேயே மனைவிக்கு மனோகரன் பிரசவம் பார்த்ததாக தெரிகிறது. கணவரால் வீட்டிலேயே பார்க்கப்பட்ட பிரசவத்தில் சுகன்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது
இதுதொடர்பாக காவல்நிலையத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். விசாரணையில் மனோகரன் உறுப்பினராக உள்ள ‘வீட்டில் குழந்தை பெற்றவர்களின் அனுபவம்' என்ற வாட்ஸ் ஆப் குழுவில் மொத்தம் 1024 பேர் உள்ளது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றன.