'சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டத்தின் தொடக்க விழா ரத்து!

 
 'சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டத்தின் தொடக்க விழா ரத்து!

மிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை நடைபெற இருந்த ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்ட தொடக்கவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.


பெண்கள் பாதுகாப்புக்கென பிரத்யேகமாக உருவாக்கப்படவிருக்கும் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' திட்டத்தை முதல்வர் ஜோசப் விஜய் நாளை சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கி வைக்க இருந்த நிலையில், தொடக்க விழா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் அறிவிப்பு
வெளியாகியுள்ளது.சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கான வாகனங்கள் புது பொலிவுடன் தயாராக இருந்த புகைப்படங்கள் மற்றும் பெண் போலீசாரின் புது சீருடை இணையத்தில் வைரலானது.