மியான்மர், தாய்லாந்தில் நிலநடுக்கம் - உதவி எண்கள் அறிவிப்பு

மியான்மர், தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களை தொடர்புகொள்ள உதவி எண்களை அறிவித்தது அயலக தமிழர் நலத்துறை.
மியான்மரில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க நிலவியல் ஆய்வு மைய கூற்றுப்படி, இது 7.7 அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம். மத்திய மியான்மரில் உள்ள சகாயிங் நகரின் வடமேற்கே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நாட்டின் பெரும் பகுதிகள் பேரழிவை சந்தித்துள்ளன. இதன் தாக்கம் சீனா, தாய்லாந்திலும் உணரப்பட்டது. பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி இதுவரை 1,002 பேர் இறந்துள்ளதாகவும், 2,376 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேபோல் தாய்லாந்தின் பாங்காக்கிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவானது. கட்டடத்தின் மேற்பகுதியில் இருக்கும் நீச்சல் குளத்தில் இருந்து நீர் அருவி போல கீழே கொட்டியது. இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 100 பேர் உயிரிழந்திருக்கலாம் என மீட்புக்குழுவினர் கூறுகின்றனர்.
இந்நிலையில் அயலக தமிழர் நலத்துறை மியான்மர், தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களை தொடர்புகொள்ள உதவி எண்களை அறிவித்தது. தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் -1800 309 3793 (இந்தியா), +91 8069009901 (வெளிநாடு) மின்அஞ்சல் - nrtchennai@gmail.com. இதேபோல் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. +91 80690 09901,
+91 80690 09900 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்.