இந்தாண்டின் கடைசி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

 
tn

அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

rain

அரபிக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என்று தெரிவித்திருந்தது.

weather

இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது! இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.