ரயிலில் இருந்து தனியாக கழண்டு சென்ற என்ஜின்..!! அலறிக் கூச்சலிட்ட பயணிகள்..

 
வேலூர் காட்பாடி - ரயில் என்ஜின் வேலூர் காட்பாடி - ரயில் என்ஜின்

திப்ரூகர்- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸின் என்ஜின் லாக் கழன்றதால்  பழுதை நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டது. 

காட்பாடி ரயில் என்ஜின்

காட்பாடி அருகே பயணிகள் ரயிலின் என்ஜின் மட்டுமே தனியே கழன்று சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அசாம் மாநிலம் திப்ருகாரில் இருந்து கன்னியாகுமரி  நோக்கி  விரைவு ரயில் சென்றுகொண்டிருந்தது. வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே முகுந்தராயபுரம் - திருவலம் இடையே சென்றுகொண்டிருந்தபோது,   திடீரென என்ஜின் மற்றும் ரயில் பெட்டிகளுக்கு இடையேயான கப்லிங் கழன்றது.  அப்போது   டமார் என்ற சத்தம் கேட்டதால் பயணிகள் அதிர்ச்சியடைந்து அலறிக் கூச்சலிட்டனர். உடனடியாக சுதாரித்துக்கொண்ட ரயில் ஓட்டுநர் சிறிது தூரம் ஓடிய என்ஜினை நிறுத்தினார்.

காட்பாடி ரயில் என்ஜின்

அதேபோன்று ரயில் பெட்டிகளும் சிறிது தூரம் ஓடியபடி நின்றது. என்ஜின் மற்றும் பெட்டிகளை இணைக்கும் கப்லிங் கழன்றதால், பயணிகளுடன் ரயில் பெட்டிகள் தனியாகவும், என்ஜின் தனியாகவும் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.  தண்டவாளத்தில் பயணிகளுடன் ரயில் பெட்டி தனியே நிற்கும் நிலையில் சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.  அதேபோல் பிரிந்து சென்ற என்ஜினை மீண்டும் பின்னோக்கி கொண்டு வர ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  இந்த பழுது காரணமாக அடுத்தடுத்த ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.  இதனால்  2  மணி நேரத்திற்கும் மேலாக பயண்கள் நடுவழியில் தவித்து வருகின்றனர்.