மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்க்க வந்தவர் மாடு முட்டி பலி
திருவாடானை அருகே மஞ்சுவிரட்டில் மாடு முட்டி வேடிக்கை பார்த்தவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கோனேரி யேந்தல் கிராமத்தில் மகாலிங்க சுவாமி கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் சிறப்பு நிகழ்வாக இன்று மாலை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சுற்று கிராம பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. போட்டியில் பங்கேற்ற ஒவ்வொரு காளைகளுக்கும் டோக்கன் வழங்கப்பட்டு அவிழ்த்து விடப்பட்டது. இந்த மஞ்சுவிரட்டில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு மாடுகளை விரட்டி பிடித்தனர்.
இதில் திருவாடானை அருகே ஆதியூர் கிராமத்தைச் சேர்ந்தபாக்கியம் (55)என்பவர் மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மஞ்சுவிரட்டில் அவிழ்த்து விடப்பட்ட காளை ஒன்று சீறி பாய்ந்து வேடிக்கை பார்த்த பாக்கியத்தை முட்டியது. இதில் அவர் குடல் சரிந்து நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்


