மண்ணைக் காக்க மண்டியிடாமல் போரிட்ட மருது சகோதரர்கள்.. வீரவணக்கம் செலுத்துவொம் - அன்புமணி..!!

 
மண்ணைக் காக்க மண்டியிடாமல் போரிட்ட மருது சகோதரர்கள்.. வீரவணக்கம் செலுத்துவொம் - அன்புமணி..!! மண்ணைக் காக்க மண்டியிடாமல் போரிட்ட மருது சகோதரர்கள்.. வீரவணக்கம் செலுத்துவொம் - அன்புமணி..!!

மண்ணைக் காக்க மண்டியிடாமல் போரிட்ட தீரர்கள் மருதுபாண்டியர்களின் நினைவுநாளில் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “வீரத்தின் விளைநிலமாகவும், வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்த மருது சகோதரர்கள் சிவகங்கை திருப்பத்தூரில் 223 ஆண்டுகளுக்கு முன் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று. தென்புலத்தில் மண்ணைக் காப்பதில் மருது சகோதரர்களுக்கு இணை எவருமில்லை. நினைவு நாளில் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.

சேதுபதி மன்னரால் அவரது மகள் வேலு நாச்சியாருக்கு பாதுகாவலர்களாக அனுப்பப்பட்ட மருது பாண்டியர்கள் பல்வேறு கால கட்டங்களில் வேலு நாச்சியாரையும், மண்ணையும் காக்க பல போர்களை நடத்தியவர்கள். ஆங்கிலேயர்களால் வீழ்த்தப்பட்ட சிவகங்கை சீமையை மீட்டு, வேலுநாச்சியாரை மீண்டும் அரியணையில் ஏற்றிய பெருமை இந்த சகோதரர்களுக்கு உண்டு. 

மண்ணைக் காக்க மண்டியிடாமல் போரிட்ட மருது சகோதரர்கள்.. வீரவணக்கம் செலுத்துவொம் - அன்புமணி..!!

1801 -ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரைத் தொடங்கிய அவர்கள் மண்ணைக் காப்பதற்காக இன்னுயிரை இதே நாளில் ஈந்தனர். மருதுசகோதரர்கள் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து பெரும் போராட்டம் வெடித்தது. இரு நாட்கள் நீடித்த அந்தப் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். பின்னர் தூக்கில் இருந்து இறக்கப்பட்ட மருது சகோதர்களின் உடல்களில் இருந்து அவர்களின் தலைகள் மட்டும் தனியாக துண்டிக்கப்பட்டு, அவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்த விருப்பப்படி, காளையார் கோயில் எதிரில் உள்ள சிறிய அறையில் அடக்கம் செய்யப்பட்டன. இப்போதும் அந்த இடத்தில் அவர்களை தங்களின் கடவுளாக அப்பகுதி மக்கள் வழிபடுகின்றனர்.  வீரத்தின் விளைநிலமாகவும், தியாகத்தின் திருவுருமாகவும் வணங்கப்படும் மருது சகோதரர்களை இந்த நாளில் போற்றுவோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.