தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்ட அலுவலருக்கு பதவி உயர்வு

 
தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை- போலீசார் உட்பட 121 பேருக்கு சம்மன்

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற துப்பாக்கிசூடு சம்பவத்திற்கு உத்தரவு பிறப்பித்தவர்களில் ஒருவரான கண்ணன் என்ற துணை தாசில்தாருக்கு தற்போது ஏரல் தாலுகாவில் தற்காலிக வட்டாச்சியர் பதவி வழங்கி இருப்பது துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பதினர் மற்றும் போராடிய மக்களின் இடையே பெரும் கொந்தளிப்பே ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை- போலீசார் உட்பட 121 பேருக்கு சம்மன்


தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை அப்புறபடுத்தகோரி பொதுமக்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் என அனைவரும் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த போராட்டமானது கிட்டதட்ட 100-நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற நிலையில் 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நூறாவதுநாள் போராட்டமாக மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர் அப்போது போலீசாரும் போராட்டகாரர்களுக்கும் ஏற்பட்ட தள்ளு முள்ளு கலவரமாக மாறியது இதனால் போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் சுமார் 13-பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நாட்டில் மிகபெரிய அதிர்வளையே ஏற்படுத்திய நிலையில் அப்போதைய அரசு மே 26-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைக்க உத்தரவிட்டு உடனடியாக ஆலையே மூடி சீல் வைக்கப்பட்டது. மேலும் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆனையம் அமைக்கப்பட்டு தூத்துக்குடியில் வைத்து துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த குடும்பத்தினர் போராடிய மக்கள், அப்போது பணியில் இருந்த காவலர்கள், அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், தென் மண்டல ஐஜியாக இருந்த சைலேஸ் குமார் யாத்வ், நெல்லை சரக டி ஐஜியாக இருந்த கபில்குமார் சர்ட்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன், தலைமை செயலாளர், அரசு மருத்துவர்கள், போராட்டத்திற்கு ஆதரவு அளித்த அரசியல்வாதிகள் என அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணை கிட்டதட்ட 3-ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்ற நிலையில்  2018,மே 22-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவதிற்கு அப்போது பொருப்பில் இருந்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தென்மண்டல ஐஜி, நெல்லை சரக டி ஐஜி, வருவாய்துறை அலுவலர்கள் என மொத்தம் 17-பேர்தான் முழு பொறுப்பு என குறிப்பிட்டு  அருணா ஜெகதீசன் விசாரணை ஆனையத்தின் முழு விசாரணை-யையும் முடித்து கடந்த 2022-ம் ஆண்டு மே 18-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்-யிடம் ஒப்படைக்கப்படது. விசாரணை அறிக்கையை பெற்றுகொண்ட முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார். அப்போது துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவு பிறப்பித்த வருவாய்த்துறை அதிகாரிகளில் ஒருவராக துணை தாசில்தார் கண்ணன் பெயர் இருந்தது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை- போலீசார் உட்பட 121 பேருக்கு சம்மன்

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய்துறையில் பணியாற்றக்கூடிய சுமார் 20-பேருக்கு  தற்காலிக பதவி உயர்வுக்கான அறிக்கையை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் அதில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு ஆனை பிறப்பித்த 3- வருவாய்துறை அதிகாரிகளில் ஒருவரான கண்ணன் என்பவருக்கு துணை வட்டாட்சியர் பதவியில் இருந்து தற்காலிக வட்டாச்சியராக ஏரல் தாலுகாவுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு இருந்ததை கண்டு துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய அருணா ஜெகதீசன் ஆனையம் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு இவர்கள்தான் முழு பொறுப்பு என்று சுட்டிகாட்டிய நபர்களில் ஒருவரான  தென்மண்டல ஐஜி சைலேந்திர குமார் யாதவ்-க்கு ஏற்கனவே டிஜிபியாக பதவி உயர்வு அளித்திருந்த நிலையில் துப்பாக்கி சூட்டிற்கு ஆணை பிறப்பித்தவர் என கூறப்பட்ட மற்றொருவரான துணை வட்டாச்சிர் கண்ணன் என்பருக்கு தற்காலிக வட்டாச்சியர் பதவி உயர்வு அளித்திருப்பது துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த குடும்த்தினர் மற்றும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.